Looking For Anything Specific?

சொப்பன சுந்தரி 2

 எங்க class பசங்க எல்லாரும், ஏதோ அழகான பொண்ணு friendship கிடைச்சிருக்குன்னு ஒடனே, photo க்கு கமெண்ட்ஸ் , msg ள பண்ண ஆரம்பிச்சிடாங்க. 

பிரபு வும் msg பண்ணான், சிவா வும் அந்த model அழகியோட photos ah நிறைய download பண்ணி இந்த account ள upload பண்ணிட்டே இருந்தான்.




எல்லா photos க்கும், பயங்கர கமெண்ட்ஸ், 





Ur sexy, i lov u, i marry u, னு start பண்ணி ரொம்ப அசிங்கமான கமெண்ட்ஸ் ம் அனுப்பிட்டிருண்தானுங்க.


Evening school முடிஞ்சதும் நான் mobile வாங்கிட்டு வீட்டுக்கு போய்ட்டேன். ஆனா, notifications வந்துட்டே இருந்தது.


Night சாப்டுட்டு என் ரூம்ல போய் படுத்தேன். என் மொபைலை ஆன் பண்ணி பார்த்தேன் எக்கச்சக்க msg. 


எல்லாத்தையும் படிச்சிட்டு சிரிச்சிட்டு இருந்தேன். அப்புறம் பிரபு online ள வந்தான். 

எனக்கு hi, hi reply me னு 100 msg அனுப்பிட்டான்.


நான் என்ன பண்றதுன்னு தெரில, சிவா க்கு call பண்ணி சொன்னேன். அவன் சும்மா hi, hello nu பேசி வை டா, tomorrow நான் class ள வந்து மதத்தை பாதுக்கறேன் னு சொன்னான்.


சரினு, நானும் hi னு reply பண்ணேன். அது அப்படியே அன்று இரவு 2 மணி வரை நீண்டு கொண்டே போய்விட்டது.


பிரபு: Hi how ru beauty..?

நான்: yes, am  fine..

பிரபு: நீ என்ன படிக்கிற?

நான்: am +2

பிரபு: ohh, superb நானும் +2 தான். நீ எந்த school?


நான் என்ன சொல்வது என்று தினறினேன். கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள கgirls school name ஐ சொல்லி வைத்தேன். 


நான்: am sakthi girls her. sec. school


இப்படியே, எங்கள் கான்வெர்சஷன் சென்றது.


அவன் என்னை விடுவதாக இல்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டு, தொல்லை செய்தான். நடுநடுவே, beauty, sexy, hotii, என்று கொஞ்சளாக பேசிக்கொண்டிருந்தான்.


ஒருவழியாக இரவு பேசிவிட்டு தூங்கிவிட்டோம். அடுத்தநாள், சிவா என் மொபைலை பார்த்து என்னடா இவ்ளோ நேரம் பேசிடிருந்திருக்க என்று கேட்டான்.


நான்: ஆமா டா, அவன் விடவே இல்லை. அதான் 

சிவாவும், மணியும், என்னுடைய மொத்த கான்வெர்சஷன் ஐ யும் படித்துபார்த்து விட்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள்.


சிவா: சத்யா, அப்டியே real பொண்ணு மாதிரியே பேசிவச்சிருக்கியே டா, superb டா, பிரபு செமையா சிக்கிட்டான். இனிமே நீ சொல்றத தான் அவன் கேக்க போறன் பாரு..


நான்: டேய், எனக்கு வேணாம் பா, இந்த விஷ பரிட்சை எல்லாம். நீ first இந்த account ah delete பண்ணி தாடா..


மணி: ஹே, இரு டா இப்ப தான open பண்ணோம் கொஞ்ச நாள் போகட்டும்.


பிரவு, class இல் இருக்கும் போதே msg பண்ண ஆரம்பிச்சிட்டான், சிவா உம் அதற்கு reply கொடுத்துக்கொண்டு இருந்தான். ஆனால் நாங்கள் first bench ல் இருப்பதால் sir க்கு தெரியாமல் மொபைல் use பண்றது கஷ்டமாக இருந்தது. அன்னைக்கே சிவா, day time ள msg பண்ணாத நான் class ள இருப்பேன் என்று சொல்லிவிட்டான். 

அன்றிலிருந்து இரவு 12, 1, 2 மணி வரை தினமும நானும் பிரபுவும் பேசினோம். எங்கள் கான்வெர்சஷன் ஐ பார்த்து தினமும் எங்கள் நண்பர்களுக்குள் சிரிப்பு தான். நான் என்ன சொன்னாலும் செய்யும் நிலமையில் இருந்தான் பிரபு. 

நம்ப school ள வர saterday colour dress தான, so, பிரபு வ ஒரு ஜோக்கர் மாதிரி வர வைக்கலாம் னு ஒரு idea சொன்னான் சிவா.

நானும் குறும்பு தனமாக try பண்ணி பாக்கலாம்னு அவன்கிட்ட அன்னைக்கி night பேசினேன்.


உனக்காக நான் என்ன வென செய்வேன் என்று சொன்னான் பிரபு, அதற்கு நான் " சரி, எனக்கு green, blue, yellow colours தான் ரொம்ப பிடிக்கும், so, இந்த colour ள நீ நாளைக்கு உங்க school க்கு dress போட்டுட்டு போ, என் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கனு தெரிஞ்சிக்குறேன்" என்றேன்.


அவனும், சரி என்று, அடுத்தநாள் பள்ளிக்கு,

Blue clr shirt, green clr pant, yellow clr டை போட்டுகொண்டு வந்தான் அதை selfi எடுத்து என் fb க்கு அனுப்பினான்.


நாங்கள் எல்லோரும் அவன் வந்த இந்த கோலத்தை பார்த்து சிரித்தோம். Class பசங்க எல்லாருமே அவன் dress ah பார்த்து சிரித்தார்கள். ஆனால், அவன் அதை கண்டுகொள்ள வில்லை. 


நான், அன்று இரவு சென்று, superb என்று அவன் selfi க்கு கமெண்ட் செய்தேன்.


1 மாதம் இப்படியே எங்களுக்கு கழிந்தது. கொஞ்ச நாள் கழித்து சொப்னா என்ற எனக்கு propose செய்தான். எனக்கு தூக்கி வாரி போட்டது. இதற்கு மேல் இவன்கிட்ட பேச கூடாதுனு இருந்துவிட்டேன். அடுத்தநாள் சிவா இதை கேட்டு ஒரே சிரிப்பு. இங்கே தான் இன்னொரு ஆபத்தும் நடந்தது. நாங்கள் பேசியதை கேட்ட மற்றொரு பையன் அதை கொண்டு போய் விஜய் இடம் பற்ற வைத்தான். அவன் பிரபு விடம் சொன்னான்.


" என்னது, முன்னாடி இருக்க அந்த மூணு பெருல யாரோதான் சொப்னா பெருல எனக்கு msg பண்ணதா..?? " பிரபுவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. அவர்களை அழைத்து விசாரித்து விடலாம் என்றான் சதீஷ். விஜய் முதலில் மணியை அழைத்தான் 


விஜய்: டேய், யாருடா அது சொப்னா பெருல fb account வச்சிருக்கறது.


மணி: அப்படி எதுவும் எனக்கு தெரியாது விஜய்,


சதீஷ்: டேய், ஒழுங்கா உண்மைய சொல்லிடுங்க, இல்லனா செம அடிவாங்குவீங்க..


மணி: சத்தியமா எனக்கு ஏதும் தெரியாது சதீஷ்..


பிரபு: சரி விடு, அது யாருன்னு நாங்க கண்டுபிடிச்சிக்கிறோம். நாங்க உன்ன கூப்பிட்டு விசாரிச்சத யாருக்கிட்டயும் நீ சொல்ல கூடாது. யாருக்காவது தெரிஞ்சா அத்துக்கே உன்னை அடிப்போம் சரியா..


மணி: சரி பிரபு, நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.


மணியை அவர்கள் கூப்பிட்டு விசாரித்தது எங்களுக்கு தெரியாது. கொஞ்ச நேரத்தில் சிவாவை அழைத்து பேசினார்கள்.மணி எங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிடான். நீ தான் சொப்னா பேர்ல accout வச்சி msg பண்ணிட்டிருக்கியாமே.


சிவா, பயத்தில் உலறிவிட்டான். இல்ல நான் msg பண்ணல சத்யா தான் msg பண்ணான். நான் வெறும் account தான் open பண்ணி குடுத்தேன் என்றான்.


பிரபு: அப்படியா, நீ சொல்றத நாங்க எப்டி நம்பறது, 

சிவா: இது தான் சத்யா mobile, வென பாருங்க, சொப்னா account இதலதான் இருக்கு.


மூன்று பேரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். 

பிரபு:சரி நீ போ, உண்ண விசரிச்சது, நீ சொன்னது எதுவும் சத்யா க்கு தெரிய கூடாது. தெரிஞ்சா நீ இருக்க மாட்ட சரியா..

சரி என்று, சிவா அழுதுகொண்டே வந்துவிட்டான்.


தொடரும்..




மீண்டும் அடுத்த நாள் இரவு பேச ஆரம்பித்தோம். 











Post a Comment

0 Comments